இடுகைகள்

கடவுளின் கைகள்

படம்
தருமமிகு சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர் ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது, இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின் குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..)   சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும்.  ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில் ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல்   வழிமறித்து, பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர் அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன் என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு. எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது,      வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக அருகில் உரசினாற்போல   நின்றது, அவசரமாய் அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய

அறிவை அளக்கலாம் வாங்க.

படம்
      நுண்ணறிவு எண்(IQ)  என்பது நம்முடைய அறிவின் அளவினைக் கண்டறிய என்று தரப்படுத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் எண். உலகின் நாலாபக்கங்களிலும் சீரியஸாக ஒரு போட்டி நடந்து வருகிறது, யார் நுண்ணறிவில் அதிக எண்ணைப்பெறுகிறார்கள் என்று. சின்ன வயதில் பலப்பம் திருடி தின்றதிலிருந்து நேற்றுப் பார்த்த எம்மா ஸ்டோனின் ஸ்பைடெர்மேன் முத்தம் வரையிலும் மறக்காமலிருந்தால் உங்கள் எண் 200 ஆக இருக்கலாம். மாறாக நீங்கள் உங்கள் ஆருயிர் நண்பன் குமாரை, கிட்டு என்று அழைத்தால் அல்சைமர்ஸ் உஙகள் முதுகுக்குப்பின்னால் காத்திருக்கிறது என்று அர்த்தம். நு.எண் ஒரு அஞ்சோ, பத்தோ இருக்கலாம்.       யூகியுடன் யூகியுங்களில் (ஜெயா டிவி) விஷாலினியை அறிமுகம் செய்தார் சேது. விஷாலினி கல்லூரிக்குச் சென்று வகுப்பெடுக்கிறாள், செமினார்களில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்கிறாள், சிக்கலான சில மனக்கணக்குகளை சேது போட்டபோது சரியான விடைகளை கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள். MPC என்கிற மைக்ரோசாஃப்ட் ப்ரொஃபெஸனல் செர்டிஃபிகேட் பெற்றிருக்கிறாள். எல்லாப்பதில்களுக்கும் சேதுவின் புருவங்களை உயர்த்த வைத்தாள், நம்முடையதையும்த
படம்
வ ர்ணங்களாலாகிய ஜாதிப்பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பேணி வந்ததன் பின்னணியில் அவைகள் போட்டிருந்த விலங்குகள் நொறுக்கப்பட்டு ஜாதிகளாலாகிய சமூகம் கொஞ்சமாய் நசிந்து சமஉரிமை, சமசமூக நீதி என்று போரிட்டுப் பெற்றுக்கொண்டிருக்கும் காலமிது. சமூக அடுக்குகள் ஜாதிகள் தவிர வறுமை, வேலையின்மை, அரசியல், சூது, பெரும்பணம் இவற்றால் இன்னமும் மாறாமலிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை., அழித்தொழிக்கமுடியாத இந்த வேறுபாடுகள் தனிமனித உளவியல் சார்ந்த அம்சமேயாகும். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஒரு சமூகம், அடுத்த தலைமுறையையும் கற்க அனுப்பமுடியாத அவலம், எவ்வளவு உழைத்தாலும் வரும் காசு பிழைத்து வாழப்போதாது என்கிற நிலை. வட்டிக்குவிட்டு கொழுக்கும் செல்வந்தனால் அழிக்கப்படுகிற குடும்பங்கள் என்று ஒரு புறமும், அரசியலும் அதிகாரமும் இணைந்து கொடுக்கிற சமூக அந்தஸ்த்தும், பணமும்தருகிற போதை ததும்பும் திமிரான வாழ்வில் எதையுமே பணத்தால் சாதித்துவிடமுடியும் என்கிற கருத்துருவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சமூக வேறுபாடுகள். ஒரு சராசரியாக மாதச்சம்பளத்தை கவனத்தில்கொண்டே நாட்களை நகர்த்தும் நம் கண்களி

வணக்கம் வாழவைக்கும் சென்னை - 1

” அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன்          அருகினில் ஓலைக்குடிசைகட்டி                பொன்னான உலகென்று பெயருமிட்டால்             இந்த பூமி சிரிக்கும்                                 அந்த சாமி சிரிக்கும் ”       அ பார வளர்ச்சியில் மணிக்கொரு மாற்றங்களைச் சந்திக்கிறது சென்னை. உலகின் மிகச்சிறந்த உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் தந்து தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார்கள். அமெரிக்க கோழியிறைச்சிக்காக நீங்கள் மால்களில் கால்கடுக்க நிற்பதற்கு பழகிக்கொண்டாக வேண்டும். வீட்டிலிருந்தபடியே உண்ணவிரும்பினாலும் கவலையில்லை சுடச்சுட வீட்டிற்குவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். திரையரங்குகள் தங்கள் தோற்றத்தை நீங்கள் விரும்பும் புதிய வடிவத்திற்கு மாற்றிக்கொண்டுவிட்டன.ஒற்றை  அரங்க முறை ஒழிந்துவிட்ட்து. தேர்ந்தெடுக்க வசதியாக வெவ்வேறு நேரங்களில் திரையிடப்படும் பல திரைப்படங்களை ஒரே கட்டிடத்தில் நீங்கள் கண்டு மகிழலாம். இருக்கைகளை முன்பதிவு செய்வதும் இணையம் வழி எளிதாக முடியும். இடைவேளையில் பொறித்த சோளத்திற்கும் குளிர்பானத்திற்கும் நீங்கள் நீண்ட வரிசையில

உன்னைப்போல்...ஒருவர்?

படம்
  ப் ளாக்குகளில்தான் எத்தனை விதம்? நகைச்சுவை, விமர்சனம், சினிமா, விளையாட்டு, கலாட்டா,கல்வி,அறிவியல் என்று இணையப் பதிவுலகம் மிக சுவாரஸ்யமாக இயங்கி வருகிறது. இதில் அதிகம் கவனம் கொள்வது மொக்கை ’ எனப்படும் நகைச்சுவை கலாட்டாக்கள் செய்கிற தளங்களாகத்தான் இருக்கக்கூடும். சீரியஸான அரசியல் கட்டுரை, மனதைப் பிழியும் ஒரு சிறுகதை, இதமாய் ஒரு கவிதை என்று வாசித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக நாம் தேடுவது இவைகளைத்தான். இந்த வகை ப்ளாக்குகளில் சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் கொஞ்சமாய், இல்லையில்லை கடுமையாய் மெனக்கெட்டு ஒரேமாதிரி தோற்றமுள்ள பிரபலங்களின் புகைப்படங்களை மட்டுமே ஒரு பதிவர் குழு- டோனி செபாஸ்டின், கார்த்திக் நாராயண், வினோத் ராமன் – உள்ளிட்ட 35 பேர் வெளியிடுகிறார்கள். மாதிரிக்கு சில..                           ப்ரியங்கா, ரேச்சல் மடோ கலைஞர், ஜெபா த ஹட்                                                                                                                                                                                                

சுனாமி ..

  உ லகில் யார் எவ்வித துன்பம் அனுபவித்தாலும், அதில் தனக்கான ஆதாயம் எவ்வளவு  என்று கணக்கிடுகிற  மானிடமனதை என்னவென்று சொல்வது?  துயரம் நிரம்பிய சுனாமி காட்சிகளைப் பார்த்து, மனம் வெதும்பி, இரங்கி, தம்மிடமுள்ள எதாவது ஒரு பொருளைக் கொடுத்து அவர்களின் துக்கத்தில் பங்குகொள்வதன்மூலம், ஒரு மன சமாதானம் அடையலாம் என்று நீங்கள் உதவிக்கரம் நீட்டினால், அதை பறித்துக்கொண்டுபோக 1000 கொடுங்கரங்கள் சுனாமி ரிலீஃப்  ஃப்ண்ட்’ என்ற் பெயரில் காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் உதவுகிற தளம் சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள ஒரு தளம். உங்கள் உதவிக்காக..                 http://www.charitynavigator.org/index.cfm?bay=content.view&cpid=1221

எங்கேயோ பார்த்த மயக்கம்..

படம்
பா ப்பாகே தேஹெய்ன் படா நாமு கரேகா... என்று தன்னுடைய கணக்கைத்துவங்கினார் உதித் நாராயண். நேப்பாளின் மைந்தர், தொடர்ந்து எல்லா இந்திய மொழிகளிலும் பிச்சு உதறினார். (அந்தந்த மொழியையும்) வசீகரமான குரல் அனாயாசமாய் உச்ச ஸ்தாயியை தொட்டுத்திரும்பும் நெளிவு, கீழ்க்குரலிலும் கவர்ச்சியாகப் பாடக்கூடிய அசத்தும் ஆளுமை.  காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் என்று தமிழில் எஸ்பிபியுடன் சேர்ந்து அவர் தொடங்கிய கணக்கு இன்றுவரை நீள்கிறது. காதல்பிசாசே பாட்டில் ‘பருவாயில்லை ’ என்ற தவறான உச்சரிப்பைக்கூட தமிழுலகம் ‘பரவாயில்லை ’ என்று மன்னித்து ஏற்றுக்கொண்ட்து.     எப்போதும் ஜலதோஷம் பிடித்த மாதிரியான குரலில் ரசிகர்களை வசீகரிக்கிற வித்தை தெரிந்தவர். குலுவாலிலே என்ற இவரது இரண்டாவது பாடலில் ’ நானென்ன கலைக்கிற ஆளா? ’ என்று தமிழக மக்களைப்பார்த்து ரஜினிக்காக இவர் கேட்டார் அர்த்தம் புரியாமலேயே.. இவர் என்ன கேட்கிறார் என்பது மக்களுக்கு கொஞ்சம் லேட்டாக... ஆனாலும் புரிந்தது. ’ ஏழையை தூக்கி எறியாதே, என்கிற இவரது அடுத்த பாடல் இலையை’ என்பதாக புரிந்து கொள்ளப்பட்டது இவருடைய தவறாக