வேக்சினப்போடுங்க மக்கா, வேக்சினப்போடுங்க!!

ந்தப்பாடல் சென்னையின் ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வசீகரமான அந்த மின்வாகங்னகள் வெவ்வேறு வண்ணங்களில் குப்பைக்கூடைகளை ஏந்தியபடி நகரை வலம் வருகின்றன, சீருடை அணிந்த அந்த வாகன ஓட்டிகள் நம்மிடமிருந்து குப்பைகளைச் சேகரித்து, அது அதற்கான கூடைகளில் சேகரிக்கிறார்கள், பின்னணியில் பாடல் ஒலித்தபடி இருக்கிறது, 

ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு, 
சுத்திபாரு, சுத்தம் பாரு.. 

உர்பேசர் சுமீத் என்கிற ஸ்பெயின் தேசத்து திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், எட்டு வருட உடன்படிக்கையில் சென்னையின் திடக்கழிவுகளைக் கையாளும் பொறுப்பைக் கையிலெடுத்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது. அவர்களின் கார்பேஜ் ஆன் தம் என்று சொல்லப்படுவதுதான் மேலே உள்ள பாடல். குறிப்பிட்ட காலை நேரங்களில் குறிப்பிட்ட தெருக்களுக்கு பாடல் ஒலிக்க இவர்கள் வருகிறார்கள். ஒரு சில நிமிடங்களில் சேகரிக்கப்படுகிற கழிவுகள் ஒரு பொதுஇடத்தில் வைக்கப்பட்டிருக்கிற பெரிய குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்பட்ட குப்பைகள் இரவுகளில் பெரிய ட்ரக்குகளால் சேகரிக்கப்பட்டு குப்பைக்கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப் படுகின்றன. 

            சென்னையின் போகுவரத்து நெரிசலில் சிக்னலில் நமக்கு முன்னே காத்திருக்கும் குப்பை ட்ரக் வெளியேற்றுகிற துர்நாற்றத்திலிருந்து நாம் விடுதலை பெற்றிருக்கிறோம், ஆமாம் இப்போதெல்லாம் அந்தக் காட்சிகள் காணக்கிடைப்பதில்லை. காலையில் வீடுகளிலும், மதியம் தொழில்நிலையங்களிலும் சேகரிக்கப் படுகிற கழிவுகள் இரவுகளில் இடம் மாற்றப்பட்டு, அடுத்தநாள் காலையில் காலித் தொட்டிகள் குப்பைகளுக்காக தயாராக வைக்கப்படுகின்றன. காலை ஒன்பது மணிக்கு சிறிய தெருக்களில் ஏறக்குறைய போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்து, குப்பைகள் பெரிய வாகனங்களில் மாற்றப்பட்டு, நெருக்கடி மிகுந்த வீதிகளில் பயணித்து குப்பைக்கிடங்கை அடையும் முறை சப்தமில்லாமல் மாற்றமடைந்திருக்கிறது. 

            இதுமட்டுமல்ல, சீருடையணிந்த மகளிர் அணி ஒன்று எல்லா தெருக்களையும் பெருக்கி சுத்தம் செய்கிறது. இப்போது பாட்டைக்கேளுங்கள், 

ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு, சுத்தம் பாரு 
 இது நம சென்னைதான்யா, 
 ஓஹோ நம்ம ஊரு நல்ல பேரு சொல்லும் பாரு, 
 சிங்கார சென்னைதான்யா. 
தூய்மையான வீதிண்ணா, 
குப்பைவண்டினால தான், 
வண்டிக்குள்ள குப்பைய 
பிரிச்சுப்போடுண்ணா, 
சுத்தமான ஊருண்ணா 
நம்ம சென்னை தாங்கண்ணா, 
வீட்டைப்போல நாட்டை ஆக்க 
ஒன்றாய் சேர்வோம் வா
ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு, சுத்தம் பாரு 
இது நம சென்னைதான்யா!!

                                .

இந்தப் பாட்டை எழுதி, இசையமைத்து பாடியிருக்கிற சச்சின் சுந்தர் மிகவும் பாராட்டுக்குரியவர், அவருடைய நேர்காணல் கீழே


  

 ஆமா, இதுக்கும் வேக்சினுக்கும் என்ன சம்பந்தம், இந்த வண்டியில இப்போ இந்தப்பாட்டும் கூடுதலா ஒலிக்குது, 

வேக்சின போடுங்க மக்கா, வேக்சினப் போடுங்க!!
 வதந்திய தள்ளி விடு, வந்து வேக்சின் எடு !
பயத்தை நம்பி விடு, நம்பி வேக்சின் எடு !

  ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!