• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...
· வ டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90 ’ களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது. தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம். · அவ்வளவே! டி.ஆர்.ராமச்சந்திரன் அதற்கு 100 சதவீதம் பொருந்துபவர். தங்கவேலுவும் தன்னுடைய பங்கிற்கு அசட்டுப்பணியாற்றினார். நாகேஷ் தன்னுடைய ஒவ்வொரு உடலசைவிலும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார். நகைச்சுவைக்கலைஞனாக வந்து சம