இடுகைகள்

சப்தமில்லாச் சென்னை!!

படம்
  நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள் , சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல , தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை , பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது எத்தகைய மனோநிலை , ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதி ல் களில் ஒன்று , மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான்.   இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும் , நடைபயிலுபவர்களுக்கும் , விளையாடும் குழந்தைகளுக்குமானது , எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங் ’ அவசியம் என்கிறது மற்ற...

வேக்சினப்போடுங்க மக்கா, வேக்சினப்போடுங்க!!

படம்
இ ந்தப்பாடல் சென்னையின் ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வசீகரமான அந்த மின்வாகங்னகள் வெவ்வேறு வண்ணங்களில் குப்பைக்கூடைகளை ஏந்தியபடி நகரை வலம் வருகின்றன, சீருடை அணிந்த அந்த வாகன ஓட்டிகள் நம்மிடமிருந்து குப்பைகளைச் சேகரித்து, அது அதற்கான கூடைகளில் சேகரிக்கிறார்கள், பின்னணியில் பாடல் ஒலித்தபடி இருக்கிறது,  ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு,  சுத்திபாரு, சுத்தம் பாரு..  உர்பேசர் சுமீத் என்கிற ஸ்பெயின் தேசத்து திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், எட்டு வருட உடன்படிக்கையில் சென்னையின் திடக்கழிவுகளைக் கையாளும் பொறுப்பைக் கையிலெடுத்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது. அவர்களின் கார்பேஜ் ஆன் தம் என்று சொல்லப்படுவதுதான் மேலே உள்ள பாடல். குறிப்பிட்ட காலை நேரங்களில் குறிப்பிட்ட தெருக்களுக்கு பாடல் ஒலிக்க இவர்கள் வருகிறார்கள். ஒரு சில நிமிடங்களில் சேகரிக்கப்படுகிற கழிவுகள் ஒரு பொதுஇடத்தில் வைக்கப்பட்டிருக்கிற பெரிய குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்பட்ட குப்பைகள் இரவுகளில் பெரிய ட்ரக்குகளால் சேகரிக்கப்பட்டு குப்பைக்கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப் படுகி...

அண்ணாத்த ஆடுறார்…

படம்
திந்தாக்கு தகிட திந்தாக்கு தகிட என்று குதித்துக் கும்மாளம் போடுகிறார் அண்ணாத்த, நமக்கும் உள்ளே துள்ளுகிறது, அமைதியாய் அமர்ந்து பார்க்கிறோம். வயது ஒரு பொருட்டில்லை, சொல்லப்போனால் அது நமக்குக் கொஞ்சம் கவலையளிக்கிறது. உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா என்று அவர் தொடர்ந்து பாடி ஆடி நம்மை மகிழ்விக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது என்பதை அவர் அண்ணாத்த கடைசிநாள் படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கிறார். உடல்நலப் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால் அவரது கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இரண்டுமூன்றுபேர் இடம்பெறக்கூடும். எப்படி இது சாத்தியமாகிறது என்று கொஞ்சம் யோசித்தால், இது இன்று நேற்றல்ல 40 வருட உழைப்பினால் கிடைத்த அன்பு, அங்கீகாரம், காதல். இன்றைக்கு 70 வயதுடையவர்கள் ரசிக்கிறார்கள், அது சம வயது என்பதால் இருக்கலாம், குழந்தைகள் / இளம்பெண்கள் ரசிப்பதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிர். அவரோடு கதாநாயகியாக நடித்து தற்போது வில்லியாக நடித்திருக்கும் குஷ்பு’ தனது மகள் அவரின் தீவிர விசிறி என்று சொல்லியிருப்பது ஒரு உதாரணம். தாதாசாகிப் பால்கே’ அ...

ஃபுட்பால் ஃபீவர் - ஆட்டம் ஒன்று.

படம்
           பிரேஸிலின் மார்சலோவின்  கால்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய பந்து அது, அவரின் கால்கள் கட்டுப்பாடு இழந்துவிட்டபடியால் குரோஷியாவிற்காக தனது முதல் கோலைப்போடும்படியாக நேர்ந்தது அவரின் துரதிருஷ்டம். உலகின் ஆகப்பெரிய விளையாட்டுத்திருவிழா அதை நடத்துகிற பிரேஸிலின் ஒரு வீரராலேயே தவறாகத் துவக்கி வைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய 11 வது நிமிடத்தில் நிகழ்ந்த இந்த தவறுக்காக பிரேஸிலின் நெய்மர் 29வது நிமிடத்தில் ஒரு கோலடித்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டார். ஆனால் அதற்குச் சற்றுமுன்புதான் அவருக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை தரப்பட்டிருந்தது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்கள் பந்து பிரேஸிலின் வசமே இருந்தது. குரோஷியாவின் கவனம் முழுவதும் தடுப்பாட்டத்தில் இருந்தது. மிகச் சிறப்பான தடுப்பாட்டம் அது. பிரேஸிலின் படு ஆக்ரோஷமான ஆட்டதினூடே குரோஷ்யாவின் லாரன், நெய்மரின் தோள்களைப்பற்றி விளையாடவிடாமல் தடுத்ததன்மூலம் ஒரு பெனால்டிகிக் கிற்கு   வழி ஏற்படுத்திக்கொடுக்க, கொஞ்சமும் தவறாமல் அதை கோலாக்கினார் நெய்மர். அதன்பிறகான குரோஷியாவின் ஆட்டம...

• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...

படம்
·                                           வ டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90 ’ களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது.            தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம். ·         அவ்வளவே!     ...

வாக்காளன் அப்பாவி அல்ல

படம்
                எ ன்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. தேர்தலை திருவிழாவாகக் கொண்டாடிய இந்திய வாக்காளன் வகைதொகை இல்லாமல் யார் என்ன பேசினாலும் பெருங்கூட்டமாய்க் கூடி தனது கை தட்டல்களைப் பரிசாகத் தந்து உற்சாகப்படுத்திய வாக்காளன் ஓட்டளித்திருக்கிற விதம் அவன் உண்மையிலேயே யார் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டது. தொடர்ந்து தொங்கு பாராளுமன்றங்களையும், அதன் தொடர்ச்சியான பல நாடகங்களையும், பக்க விளைவான பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியாவுக்குத் தந்துகொண்டிருப்பதை ஒரு ஜனநாயகக் கடமையாகவே ஆற்றிவந்த இந்திய வாக்காளன் இந்தமுறை அந்த தர்ம ’ த்தை தன் உள்ளுணர்வையும் மீறி, மீறியிருக்கிறான். ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைவதைத் தவிர்த்ததன் மூலம் ஒரு ஆட்சியாளனை முழு சுதந்திரத்தோடு பணியாற்றுவதற்கு அனுமதியளித்திருக்கிறான். அவனுக்கு நன்றி. இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய் இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானா...