இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு படம், ஒரே ஒரு படம் நீங்க நல்லா நடிச்சிருப்பீங்க...

வீ ட்டிற்கு யாராவது விருந்தினர் வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவது யாராக இருக்கும்? அந்த வீட்டிலுள்ள வாண்டுகள், தவிர கொஞ்சம் வயதானவர்கள். நேரில் சென்று பார்க்கமுடியாத நிலையில் வீடு தேடி விருந்தினர் வந்ததனால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். ஒரு வீடே மகிழ்ச்சியடைகிறதென்றால் வந்திருப்பவர் எல்லா வயதினரையும் மகிழ்விக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் அன்று அழைக்கப்பட்டிருந்தார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேஜை நாற்காலிகள் வாடகைக்கு வாங்கப்பட்டிருந்த்து. ரேடியோ ஒன்று தவணை முறையில். வீடு முழுவதும் புது வண்ணத்தில் குளித்திருந்தது. கோட் சூட் அணிந்து ஆண்கள் தயாராக , பெண்களுக்காக இரவல் வாங்கப்பட்ட நகைகள் காத்திருந்தன. விருந்தினர் குறித்த நேரத்தில் வந்தார், அவர் ஒரு நடிகை. பெயர் பாமா. வீடு டி.எஸ்.பாலையாவினுடையது, அழைத்துவந்தது மேஜர், முத்துராமன், நாகேஷ் சகோதரர்கள். முதலில் முத்துராமன் வீட்டிற்கும் பின்பு மேஜரின் வீட்டிற்கும் (வீடென்றால் வீடில்லை, அறை) போய்வரும் பாமா அடுத்ததாகப்போவது நாகேஷின் அறை. ஒரு நடிகை திடீரென்று உங்கள் வீட்டிற்கு வந்த

சும்மா இரு, சொல்லற..

சுட்டுவிடக்கூடும் சில சொற்கள்.. இதமாய் இதயம் தடவும், முகம் மலர்த்தி புன்னகைக்கும், ‘திடும்’ மென கோரமுகம் காட்டி மனது குலைக்கும், எந்த விளைவுகளுமற்று பொருளற்றதாயும் சில, நி றுத்தவோ, சுருக்கிக் குறுக்கிவிடவோ முடியாததாயும்  தொடர்கின்றன பல வேளைகளில் சொற்கள்... சிக்கல்களற்ற எளிமையோடு,  வியக்கும்படியான உயரத்தில் எப்போதும், மௌனம்.