இடுகைகள்

புலம்பல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சண்டே ஸ்நாக்ஸ் 2

படம்
·          ஐடியா மேக்ஸ் த மான் ’ என்பார்கள். மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் புதிய ஐடியாக்களை செயல்படுத்திப் பார்த்ததன் விளைவுதான். அப்படித்தான் அவன் ரூபாய்நோட்டுகளை எண்ணுவதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். வங்கிகளிலும் அதிகம் பணம்புழங்கும் அலுவலகங்களிலும் அதைப்பயன்படுத்தத் துவங்கினார்கள். என்றாலும் யாரும் அதை நம்புவதில்லை. எவ்வளவு கூட்டம் காத்திருந்தாலும் காசாளர்கள் ஒருமுறை கையால் எண்ணிவிட்டு பின்பு இயந்திரத்தில் போட்டு எண்ணி மீண்டும் ஒருமுறை கையால் எண்ணி அதன்பிறகே அந்தத்தொகை சரியாக இருக்கிறது என்று முடிவுக்கு வருவார்கள். சமீபத்தில் ஒருநாள் பணம் கட்டுவதற்காக் தொலைபேசி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு இதுபோன்ற ஒரு இயந்திரமிருந்தது. பணம் வசூலிக்கிற பெண்மணி சற்றே வயதானவராக இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைகளுமாக இருந்த அவற்றில் சில்லறை நோட்டுகளை தனியே வைத்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் இரண்டு முறை(??) எண்ணியபிறகு அந்த பணமெண்ணும் இயந்திரத்...

கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!

படம்
 அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு       அவ்வளவாய்ப் பேசுவதில்லை இவர் என்னோடு,         இதுவரை விலகியே இருந்த மற்றொருவர் இப்போது            என் நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது               தெரிந்ததும், அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.                அவர் விலகியதை அறிந்து இவர் மீண்டும்                 பேசத்துவங்கினார். பிறிதொருவர் இப்போது அவருக்கு           நண்பரானார், இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்        துவங்கிய நாளிலிருந்து, நான் இருவரோடும்                   இப்பொது பேசுவதில்லை .

சும்மா இரு, சொல்லற..

சுட்டுவிடக்கூடும் சில சொற்கள்.. இதமாய் இதயம் தடவும், முகம் மலர்த்தி புன்னகைக்கும், ‘திடும்’ மென கோரமுகம் காட்டி மனது குலைக்கும், எந்த விளைவுகளுமற்று பொருளற்றதாயும் சில, நி றுத்தவோ, சுருக்கிக் குறுக்கிவிடவோ முடியாததாயும்  தொடர்கின்றன பல வேளைகளில் சொற்கள்... சிக்கல்களற்ற எளிமையோடு,  வியக்கும்படியான உயரத்தில் எப்போதும், மௌனம்.