கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!
அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு
அவ்வளவாய்ப்
பேசுவதில்லை இவர் என்னோடு,
இதுவரை
விலகியே இருந்த மற்றொருவர் இப்போது
என்
நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது
தெரிந்ததும்,
அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.
அவர்
விலகியதை அறிந்து இவர் மீண்டும்
பேசத்துவங்கினார்.
பிறிதொருவர் இப்போது அவருக்கு
நண்பரானார்,
இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்
துவங்கிய
நாளிலிருந்து, நான் இருவரோடும்
இப்பொது பேசுவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக