இடுகைகள்

அனுபவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சப்தமில்லாச் சென்னை!!

படம்
  நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள் , சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல , தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை , பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது எத்தகைய மனோநிலை , ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதி ல் களில் ஒன்று , மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான்.   இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும் , நடைபயிலுபவர்களுக்கும் , விளையாடும் குழந்தைகளுக்குமானது , எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங் ’ அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.

சண்டே ஸ்நாக்ஸ் 2

படம்
·          ஐடியா மேக்ஸ் த மான் ’ என்பார்கள். மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் புதிய ஐடியாக்களை செயல்படுத்திப் பார்த்ததன் விளைவுதான். அப்படித்தான் அவன் ரூபாய்நோட்டுகளை எண்ணுவதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். வங்கிகளிலும் அதிகம் பணம்புழங்கும் அலுவலகங்களிலும் அதைப்பயன்படுத்தத் துவங்கினார்கள். என்றாலும் யாரும் அதை நம்புவதில்லை. எவ்வளவு கூட்டம் காத்திருந்தாலும் காசாளர்கள் ஒருமுறை கையால் எண்ணிவிட்டு பின்பு இயந்திரத்தில் போட்டு எண்ணி மீண்டும் ஒருமுறை கையால் எண்ணி அதன்பிறகே அந்தத்தொகை சரியாக இருக்கிறது என்று முடிவுக்கு வருவார்கள். சமீபத்தில் ஒருநாள் பணம் கட்டுவதற்காக் தொலைபேசி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு இதுபோன்ற ஒரு இயந்திரமிருந்தது. பணம் வசூலிக்கிற பெண்மணி சற்றே வயதானவராக இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைகளுமாக இருந்த அவற்றில் சில்லறை நோட்டுகளை தனியே வைத்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் இரண்டு முறை(??) எண்ணியபிறகு அந்த பணமெண்ணும் இயந்திரத்தில் போட்டார். அது 2 என்று ஒளிர்ந்தது.

கொலுவோடு கொண்டாடு

படம்
      கொலு என்றால் சின்னவயதில் கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகளில் மட்டும் வைக்கப்பட்டிருக்கும் 9 படிகள்கொண்ட பிரம்மாண்டம்தான் ஞாபகம் வருகிறது. 9 நாட்களிலும் தவறாது நண்பர்கள் சகிதம் ஆஜராகிவிடுவேன். பெரியவர்கள் இரண்டு பக்திப்பாடலகளைப் பாடிமுடித்தபிறகு சிறுமியர்களின் நடனம் ஆரம்பமாகும். வெறுமே கைகொட்டியும் பின்பு கோலாட்டோடும் பாடப்படுகிற கதையோடு நகைச்சுவை கலந்த பாடல்கள் இப்போதும் ஊர்த்தெருக்களில் கற்றி அலையக்கூடும். இதில் பாடப்படுகிற பல பாடல்களை பள்ளிகளில் பாடி கேலி செய்து, சம்பத்தப்பட்ட சிறுமியிடம் திட்டு வாங்குவதும், பின்பு மாலையில் கொலுவைக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லப்பட்டு மிரட்டவும் படுவோம். ‘கிண்டல் பண்ணீங்கண்ணா இனிமே இங்க வரக்கூடாது’. இழக்கவே முடியாத கொலுவிற்காக, எல்லோர் முன்பும் கிண்டல் செய்துவிட்டு தனிமையில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட கதைகள் ஒரு தனி அத்தியாயம். அந்த 9 நாட்களிலும் அவர்கள்தான் ஹீரோக்கள், மாலை 5 மணிக்கே கொலுவைத்திருக்கிற வீட்டின் வாசலில்கூடிவிடுவோம். வீட்டுமுற்றத்தில் ஏதாவது விளையாடுவதும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுமாக இருப்போம், அது வீட்டிலுள்ளவர்கள