இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சப்தமில்லாச் சென்னை!!

படம்
  நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள் , சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல , தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை , பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது எத்தகைய மனோநிலை , ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதி ல் களில் ஒன்று , மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான்.   இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும் , நடைபயிலுபவர்களுக்கும் , விளையாடும் குழந்தைகளுக்குமானது , எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங் ’ அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.

வேக்சினப்போடுங்க மக்கா, வேக்சினப்போடுங்க!!

படம்
இ ந்தப்பாடல் சென்னையின் ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வசீகரமான அந்த மின்வாகங்னகள் வெவ்வேறு வண்ணங்களில் குப்பைக்கூடைகளை ஏந்தியபடி நகரை வலம் வருகின்றன, சீருடை அணிந்த அந்த வாகன ஓட்டிகள் நம்மிடமிருந்து குப்பைகளைச் சேகரித்து, அது அதற்கான கூடைகளில் சேகரிக்கிறார்கள், பின்னணியில் பாடல் ஒலித்தபடி இருக்கிறது,  ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு,  சுத்திபாரு, சுத்தம் பாரு..  உர்பேசர் சுமீத் என்கிற ஸ்பெயின் தேசத்து திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், எட்டு வருட உடன்படிக்கையில் சென்னையின் திடக்கழிவுகளைக் கையாளும் பொறுப்பைக் கையிலெடுத்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது. அவர்களின் கார்பேஜ் ஆன் தம் என்று சொல்லப்படுவதுதான் மேலே உள்ள பாடல். குறிப்பிட்ட காலை நேரங்களில் குறிப்பிட்ட தெருக்களுக்கு பாடல் ஒலிக்க இவர்கள் வருகிறார்கள். ஒரு சில நிமிடங்களில் சேகரிக்கப்படுகிற கழிவுகள் ஒரு பொதுஇடத்தில் வைக்கப்பட்டிருக்கிற பெரிய குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்பட்ட குப்பைகள் இரவுகளில் பெரிய ட்ரக்குகளால் சேகரிக்கப்பட்டு குப்பைக்கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப் படுகின்றன.         

சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

படம்
          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.    செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை த

கடவுளின் கைகள்

படம்
தருமமிகு சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர் ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது, இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின் குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..)   சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும்.  ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில் ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல்   வழிமறித்து, பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர் அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன் என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு. எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது,      வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக அருகில் உரசினாற்போல   நின்றது, அவசரமாய் அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய