சப்தமில்லாச் சென்னை!!
நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள் , சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல , தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை , பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது எத்தகைய மனோநிலை , ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதி ல் களில் ஒன்று , மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான். இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும் , நடைபயிலுபவர்களுக்கும் , விளையாடும் குழந்தைகளுக்குமானது , எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங் ’ அவசியம் என்கிறது மற்ற...