அறிவை அளக்கலாம் வாங்க.
நுண்ணறிவு எண்(IQ)
என்பது நம்முடைய அறிவின் அளவினைக் கண்டறிய என்று தரப்படுத்தப்பட்ட பல்வேறு
சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் எண். உலகின் நாலாபக்கங்களிலும் சீரியஸாக ஒரு போட்டி
நடந்து வருகிறது, யார் நுண்ணறிவில் அதிக எண்ணைப்பெறுகிறார்கள் என்று. சின்ன வயதில்
பலப்பம் திருடி தின்றதிலிருந்து நேற்றுப் பார்த்த எம்மா ஸ்டோனின் ஸ்பைடெர்மேன்
முத்தம் வரையிலும் மறக்காமலிருந்தால் உங்கள் எண் 200 ஆக இருக்கலாம். மாறாக நீங்கள்
உங்கள் ஆருயிர் நண்பன் குமாரை, கிட்டு என்று அழைத்தால் அல்சைமர்ஸ் உஙகள்
முதுகுக்குப்பின்னால் காத்திருக்கிறது என்று அர்த்தம். நு.எண் ஒரு அஞ்சோ, பத்தோ
இருக்கலாம்.
யூகியுடன் யூகியுங்களில்
(ஜெயா டிவி) விஷாலினியை அறிமுகம் செய்தார் சேது. விஷாலினி கல்லூரிக்குச் சென்று
வகுப்பெடுக்கிறாள், செமினார்களில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்கிறாள்,
சிக்கலான சில மனக்கணக்குகளை சேது போட்டபோது சரியான விடைகளை கொஞ்சமும் தாமதிக்காமல்
சொன்னாள். MPC என்கிற
மைக்ரோசாஃப்ட் ப்ரொஃபெஸனல் செர்டிஃபிகேட் பெற்றிருக்கிறாள். எல்லாப்பதில்களுக்கும்
சேதுவின் புருவங்களை உயர்த்த வைத்தாள், நம்முடையதையும்தான். உன்னுடைய நுண்ணறிவு
எண்ணை நம்புகிறேன் என்று பூங்கொத்து கொடுத்து சரணடைந்தார் சேது. அமெரிக்க சிஸ்கொ
செர்டிஃபைடு நெட்வொர்க் அஸ்ஸோஸியேட் தேர்வில் (CCNA) 90% சதவிகிதம் பெற்று, அங்கு நடைபெற்ற
அறிவுஜீவிகளின் கூட்ட்த்தில் உரையாற்றி கைதட்டலைப் பெற்ற விஷாலினி, திருநெல்வேலி,
பாளையங்கோட்டையில் ஒரு எலக்ட்ரீஷியன் அப்பாவிற்கும், வீடுவடிவமைப்பாளர்(House maker??)
அம்மாவிற்கும் பிறந்த தற்போது 12 வயதாகும் குழந்தை என்பதுதான் ஆச்சர்ய கூடுதல்
தகவல். பிறந்த்திலிருந்தே பேச்சு சரியாக வரவில்லை அதற்கு பயிற்சியெல்லாம்
கொடுத்தோம் என்று பெற்றோர் சொல்வதை சூடனை அணைத்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப
மாட்டார்கள். நுண்ணறிவு எண் குறித்துப் பேசும்போது சராசரி மனிதனின் எண் 100 முதல்
110 வரை இருக்குமென்றும், ஐன்ஸ்டீனுக்கு 180, பில்கேட்ஸுக்கு 160, மடொனாவுக்கு 140
என்றும் உலகின் மிக அதிக எண் உடையவராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பவர்
சிங் யுங் யான் என்றார், அவரது எண் 210. அப்படியென்றால்
விஷாலினிக்கோ, அதிகமில்லை ஜெண்டில்மென் 225 தான்.
விஷாலினிக்கோ, அதிகமில்லை ஜெண்டில்மென் 225 தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக