ஒரு படம், ஒரே ஒரு படம் நீங்க நல்லா நடிச்சிருப்பீங்க...


வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவது யாராக இருக்கும்? அந்த வீட்டிலுள்ள வாண்டுகள், தவிர கொஞ்சம் வயதானவர்கள். நேரில் சென்று பார்க்கமுடியாத நிலையில் வீடு தேடி விருந்தினர் வந்ததனால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். ஒரு வீடே மகிழ்ச்சியடைகிறதென்றால் வந்திருப்பவர் எல்லா வயதினரையும் மகிழ்விக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் அன்று அழைக்கப்பட்டிருந்தார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேஜை நாற்காலிகள் வாடகைக்கு வாங்கப்பட்டிருந்த்து. ரேடியோ ஒன்று தவணை முறையில். வீடு முழுவதும் புது வண்ணத்தில் குளித்திருந்தது. கோட் சூட் அணிந்து ஆண்கள் தயாராக, பெண்களுக்காக இரவல் வாங்கப்பட்ட நகைகள் காத்திருந்தன. விருந்தினர் குறித்த நேரத்தில் வந்தார், அவர் ஒரு நடிகை. பெயர் பாமா. வீடு டி.எஸ்.பாலையாவினுடையது, அழைத்துவந்தது மேஜர், முத்துராமன், நாகேஷ் சகோதரர்கள். முதலில் முத்துராமன் வீட்டிற்கும் பின்பு மேஜரின் வீட்டிற்கும் (வீடென்றால் வீடில்லை, அறை) போய்வரும் பாமா அடுத்ததாகப்போவது நாகேஷின் அறை. ஒரு நடிகை திடீரென்று உங்கள் வீட்டிற்கு வந்தால் ( என்னதான் முன்னறிவிப்பு செய்திருந்தாலும்) எப்படியெல்லாம் தடுமாறுவீர்கள் என்பதை நாகேஷ் நடித்து நீங்கள் பார்க்க வேண்டும்.
இது பெரிய விஷயமில்லை.. அந்த நடிகையிடம் அவரும் அவர் மனைவியும் கேட்கிற கேள்விகள்..தமிழ் சினிமாவில் சினிமா மற்றும் நடிகை குறித்த முதல் பகடியாக இருந்திருக்கக்கூடும் இது என்று தோன்றுகிறது. அவர் மனைவி, பாமாவிடம் கேட்பார்.. சோகக்காட்சிகளில் அழுதுகொண்டே ஒடிவந்து  பொத்தென்று மெத்தையிலே விழுறீங்களே அது ஏன்? அதற்கு நாகேஷின் பதில்...தரையில விழுந்தா பல்லு பேந்திரும் அதான். அடுத்த கேள்வி விதவிதமா சிகையலங்காரம் பண்ணிக்கிறீங்களே அது எப்படி? அதற்கு பதிலளித்திருப்பார் பாருங்கள்..   இதெல்லாம்விட இடையிடையே ஒரு டயலாக் வரும்..ஒரு படம் ஒரே ஒரு படம் நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருப்பீங்க..அது என்ன படம்? இண்டெர்வெல்ல எல்லோரும் வெளிய போய் சந்தோஷமா இருப்பாங்களே!!!”   சான்ஸே இல்ல... நீங்களும் பாருங்க.
http://www.youtube.com/watch?v=uwaMnVc_cmg

கருத்துகள்

 1. பல தடவை பார்த்துள்ளேன். பாலசந்தரின் தரமான படங்களில் ஒன்று. வரவு எட்டணா! பாடலும் அருமை!

  பதிலளிநீக்கு
 2. தேர்ந்தெடுத்த நகைச்சுவைகளில் ஒன்றான இதை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 3. பாமா விஜயம் ஒரு மறக்க முடியாத நகைச்சுவைப் படம்!

  பதிலளிநீக்கு
 4. எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சப்தமில்லாச் சென்னை!!