”அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில்
ஓலைக்குடிசைகட்டி பொன்னான
உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி
சிரிக்கும்”
அபார
வளர்ச்சியில் மணிக்கொரு மாற்றங்களைச் சந்திக்கிறது சென்னை. உலகின் மிகச்சிறந்த
உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் தந்து தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார்கள்.
அமெரிக்க கோழியிறைச்சிக்காக நீங்கள் மால்களில் கால்கடுக்க நிற்பதற்கு பழகிக்கொண்டாக
வேண்டும். வீட்டிலிருந்தபடியே உண்ணவிரும்பினாலும் கவலையில்லை சுடச்சுட வீட்டிற்குவரும்
பதப்படுத்தப்பட்ட உணவுகள். திரையரங்குகள் தங்கள் தோற்றத்தை நீங்கள் விரும்பும்
புதிய வடிவத்திற்கு மாற்றிக்கொண்டுவிட்டன.ஒற்றை
அரங்க முறை ஒழிந்துவிட்ட்து. தேர்ந்தெடுக்க வசதியாக வெவ்வேறு நேரங்களில்
திரையிடப்படும் பல திரைப்படங்களை ஒரே கட்டிடத்தில் நீங்கள் கண்டு மகிழலாம். இருக்கைகளை
முன்பதிவு செய்வதும் இணையம் வழி எளிதாக முடியும். இடைவேளையில் பொறித்த சோளத்திற்கும்
குளிர்பானத்திற்கும் நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணலாம்.
பிரபலங்கள் எல்லோருக்கும், சொந்தமாக மால்கள் இருக்கின்றன. உங்கள் சேமிப்புகளை
உறுஞ்சுவதற்கென்றே ப்ரத்யேகமாய் வடிவமைக்கப்பட்டவை அவை. உலகின் சிறந்த
தயாரிப்புகள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்கலாம். எல்லா
துணிக்கடைகளும் வருடம் முழுவதுமே தள்ளுபடி விலையில் துணிகளை வழங்குகின்றன.
காய்கறிகளுக்கும், பழங்களுக்கும்கூட இலவச இணைப்புகள் அறிவிக்கப்படுகின்றன. பில்டர்களும்
ப்ரமோட்டர்களும் தமிழ்சமூகத்தை மிகமிகப் பாதுகாப்பான “அரண் சமூகமாக” ( Gated Community ) மாற்ற
அல்லும் பகலும் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த உணவையும் உடன்
வழங்கும் ஓய்வுபெற்றோருக்கான கட்டிடங்களும் தயார். 24 மணிநேர மருத்துவம், நடைபழக சற்றே சொரசொரப்பான நடைபாதை, ஓய்வெடுக்க
அழகிய பூங்காக்கள் எல்லாம் கொண்ட அழகிய கட்டிடங்கள். பெற்றோரை அங்கு
ஒப்படைத்துவிட்டு மகன்கள் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கலாம். சென்னையின்
இதயப்பகுதியில் ஒரு சதுர அடி கட்டிடத்தின் விலை பதினோராயிரம் ரூபாய்கள்.
இதெற்கெல்லாம் நீங்கள் சம்பாதிக்க வேண்டாமா... கவலையே வேண்டாம் மிகச்சிறந்த கல்வியை
வழங்க ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்கள் தங்கள் மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில்
பணியாற்றுகிறார்கள் என்கிற பட்டியலோடு காத்திருக்கின்றன. இவ்வளவு சிறப்புகள்கொண்ட
சென்னையை ஒரு முறை முழுவதுமாக அலசிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த வீடியோவை ஒரு
முறை..ப்ளீஸ்.
http://www.youtube.com/watch?v=0qxPZ81C8VQ&noredirect=1
கருத்துகள்
கருத்துரையிடுக