இடுகைகள்

• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...

படம்
·                                           வ டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90 ’ களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது.            தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம். ·         அவ்வளவே!            டி.ஆர்.ராமச்சந்திரன் அதற்கு 100 சதவீதம் பொருந்துபவர். தங்கவேலுவும் தன்னுடைய பங்கிற்கு அசட்டுப்பணியாற்றினார். நாகேஷ் தன்னுடைய ஒவ்வொரு உடலசைவிலும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார். நகைச்சுவைக்கலைஞனாக வந்து சம

வாக்காளன் அப்பாவி அல்ல

படம்
                எ ன்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. தேர்தலை திருவிழாவாகக் கொண்டாடிய இந்திய வாக்காளன் வகைதொகை இல்லாமல் யார் என்ன பேசினாலும் பெருங்கூட்டமாய்க் கூடி தனது கை தட்டல்களைப் பரிசாகத் தந்து உற்சாகப்படுத்திய வாக்காளன் ஓட்டளித்திருக்கிற விதம் அவன் உண்மையிலேயே யார் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டது. தொடர்ந்து தொங்கு பாராளுமன்றங்களையும், அதன் தொடர்ச்சியான பல நாடகங்களையும், பக்க விளைவான பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியாவுக்குத் தந்துகொண்டிருப்பதை ஒரு ஜனநாயகக் கடமையாகவே ஆற்றிவந்த இந்திய வாக்காளன் இந்தமுறை அந்த தர்ம ’ த்தை தன் உள்ளுணர்வையும் மீறி, மீறியிருக்கிறான். ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைவதைத் தவிர்த்ததன் மூலம் ஒரு ஆட்சியாளனை முழு சுதந்திரத்தோடு பணியாற்றுவதற்கு அனுமதியளித்திருக்கிறான். அவனுக்கு நன்றி. இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய் இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானால் எல்லா தரப்பு மக்களும் காவிக்கு வாக்களித்திருப்பது எதனால்? மதசார்பி

ஒரு அப்பாவி வாக்காளனின் புலம்பல்கள்.

படம்
வணக்கம் . மீண்டுமொருமுறை நாம் வாக்குச்சாவடிகளுக்கு “வருகைபுரிய” இருக்கிறோம். காலச்சுழற்சியில் இந்தியாவின் – சுதந்திர இந்தியாவின் – 16வது தேர்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம். நம் கைகளில் ஐந்தாண்டுகளுக்குஒருமுறை மட்டுமே தரப்படுகிற அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாழ்க்கை அனுமதிச்சீட்டு. நாம் சில விஷயங்களை   நினைவுகொள்ளவேண்டிய தருணம் இது, ஆமாம் அது மிக அவசியமானதும்கூட. ஒரு நாட்டின் மிக அடிப்படைத்தேவைகளான கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றில் சுதந்திரத்திற்கு பின்பான இந்த 67 வருடங்களில் நமது நிலை என்ன? ஏற்றுமதியிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்? பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் நமது முன்னேற்றம் அல்லது பின்னடைவிற்கான உண்மையான காரணிகள் என்ன? நதிநீர் இணைப்பு இதுவரை சாத்தியமாகாததன் மர்மம் என்ன?       இதற்கெல்லாம் ஒரே பதில்தான். அது, நம்முடைய எதற்கும் அசராத   ” சகிப்புத்தன்மை”. நமது சகிப்புத்தன்மையின்மேல் கட்டமைக்கப்படுகிற அரசு, அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன் காரணமாகவே இந்தக் கேள்விகளுக்கு நம

சண்டே ஸ்நாக்ஸ் 3

படம்
பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளில் சில எல்லோரும் அதிகம் பயன்படுத்துபவையாக இருக்கும். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒருசில வார்த்தைகள் அதிகமாகப் புழங்கும். திருநெல்வேலியில் அண்ண ’ வும் மதுரையில் அண்ணே ’ வும் சென்னையில் அண்ணா ’ வும் போல ஒரே வார்த்தை வெவ்வேறு தொனி ’ களில் உச்சரிக்கப்படுவதுமுண்டு. ஆங்கிலவார்த்தைகள் அன்றாட வாழ்வின் பேச்சுபோக்கில் கலந்தபிறகு ஏரியாவேறுபாடின்றி ஒரே உச்சரிப்பில் எங்கும் புழங்கும் சமத்துவ வார்த்தைகளாக சிலவும் நிலவிவருகின்றன. அப்படி ஒரு வார்த்தை லூசு ’. நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ பிரயாணம் செய்யும்போது அல்லது காத்திருக்கும்போதோ இந்த வார்த்தையை யாராவது யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு தானிருப்பீர்கள். செல்ஃபோனில் பறிமாறப்படுகிற 25 வார்த்தைகளில் இது இரண்டுமுறை இடம்பெறும். பேசிக்கொள்பவர்கள் காதலர்களானால் இதன் எண்ணிக்கை 10ஐத்தாண்டும். லூசு என்பது தமிழ்வார்த்தையா என்று சொல்லுங்கண்ணே சொல்லுங்க ’ இமான் அண்ணாச்சியிடம் சொல்லி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சத்தியம் செய்வார்கள் தமிழ்தானென்று. என் மகள் அவள் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தாள், ” அப்பா, ஸ