சண்டே ஸ்நாக்ஸ் 3  • பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளில் சில எல்லோரும் அதிகம் பயன்படுத்துபவையாக இருக்கும். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒருசில வார்த்தைகள் அதிகமாகப் புழங்கும். திருநெல்வேலியில் அண்ணவும் மதுரையில் அண்ணேவும் சென்னையில் அண்ணாவும் போல ஒரே வார்த்தை வெவ்வேறு தொனிகளில் உச்சரிக்கப்படுவதுமுண்டு. ஆங்கிலவார்த்தைகள் அன்றாட வாழ்வின் பேச்சுபோக்கில் கலந்தபிறகு ஏரியாவேறுபாடின்றி ஒரே உச்சரிப்பில் எங்கும் புழங்கும் சமத்துவ வார்த்தைகளாக சிலவும் நிலவிவருகின்றன. அப்படி ஒரு வார்த்தை லூசு’. நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ பிரயாணம் செய்யும்போது அல்லது காத்திருக்கும்போதோ இந்த வார்த்தையை யாராவது யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு தானிருப்பீர்கள். செல்ஃபோனில் பறிமாறப்படுகிற 25 வார்த்தைகளில் இது இரண்டுமுறை இடம்பெறும். பேசிக்கொள்பவர்கள் காதலர்களானால் இதன் எண்ணிக்கை 10ஐத்தாண்டும். லூசு என்பது தமிழ்வார்த்தையா என்று சொல்லுங்கண்ணே சொல்லுங்கஇமான் அண்ணாச்சியிடம் சொல்லி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சத்தியம் செய்வார்கள் தமிழ்தானென்று. என் மகள் அவள் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தாள், அப்பா, ஸ்கூல்ல இல்லப்பா, அந்த லூசு சயின்ஸ் டீச்சரு, லூசுத்தனமா ஒரு ஹோம்வொர்க் குடுத்திச்சுப்பா. தெர்மோகோல்ல ஒரு ராக்கெட் லாஞ்ச்பேட் செய்யணுமா, அதில லூசா இல்லாம டைட்டா ராக்கெட்ட வேற ஃபிக்ஸ் பண்ணனுமாம். அஸ்ட்ரொநட்ஸ், ஸ்டேண்ட், அது இதுண்ணு எல்லாமே அதில இருக்கணுமா, அதயும் நாளைகே செஞ்சு எடுத்துட்டு வரணுமாம். அந்த லூசு சொல்லிட்டேபோகுது, அதுக்கு இந்த லூசுங்களும் சரிசரிண்ணு தலய ஆட்டுதுங்க. எனக்கு கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது, கண்களைமூடி சாய்ந்து அமர்ந்தேன். ‘அம்மா இந்த லூஸப் பாரேன் நான் சொல்லிடே இருக்கேன், அது பாட்டுக்கு தூங்குது.... 

  • ·         யாரோடோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிற அப்பா அப்போதுதான் கவனிப்பார், குட்டிமகள் கரடிபொம்மையோடு ஏதோ தனியாகப்பேசிக்கொண்டிருப்பாள். கரடியின் பின்னால்போய் அவ்ளுக்குத் தெரியாமல் அமர்ந்துகொள்வார். இப்போது அவள் க்ரீம்பிஸ்கட்டை எப்படிச் சாப்பிடுவது என்று பொம்மைக்கு விளக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, அவள் கரடியைக் கை நீட்டச்சொல்லும்போது அப்பா கை நீட்டுவார். மகளுக்கு அப்பா ஒளிந்திருக்கிறார என்று தெரிந்தபிறகும் விளையாட்டு தொடரும். அப்புறம் பிஸ்கெட்டின் ஒருபகுதியை நக்கச்சொல்லும்போது அப்பா முகம் காட்டுவார், அப்போது மகள் அதுவரை தெரியாத்துபோல் ‘அட நீயா ஒளிஞ்சுக்கிட்டிருக்கேஎன்பதுபோல் சிரித்துக்கொண்டே கை ஆட்டுவாள். வாழ்வின் அற்புத தருணங்கள் அவை. குழந்தைகளின் உலகத்துக்குள் பயணித்துவிட நேர்கிர தருணங்களை நல்ல விளம்பரங்களே நமக்கு உருவாக்கித்தருகின்றன. ஒரியோவின் விளம்பரங்களில் அதுகொஞ்சம் அதிகமாகவே வெளிப்படும். அந்த வரிசையில் கண்ணைக்கட்டிக்கொண்டு ஒரியோ சாப்பிடும் இந்தக்குழந்தைள் ஒரியோவின் சமீபத்திய வரவு, தமிழில் இன்னும் வரவில்லை.


      

      •    நவீன உலகில் பெண்கள்நிலை எனபதில் இன்னும் தீராத பழமையும், அதிநவீனமும் கலந்தே காணப்படுகிறது. இணையத்தில் சுதந்திரமாக உலவுவதில் பெண்கள் எதிர்கொள்கிற சங்கடங்களும், ஆண்கள்மேலான பாலியல்சார்ந்த பழிகளுமாக ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் இருக்கிற உளவியல் சிக்கலில் இருந்து நம்மால் விடுபடமுடியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது நம்முடைய கர்வத்தை அதிகப்படுத்தி வழக்கு, விசாரணை என்று தொடர்கிறது. கருத்துகள் ஏதுமற்றவராக இருப்பவர் இணைய உலகில் உலவும் சாத்தியங்களை இழககிறார். எது எப்படியாயினும் ஆண்மனோபாவம் பெண்களின்மீதான ஒருபடிகுறைந்தபார்வையைத்தான் இன்னும் தொடர்கிறதோ என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. என் எஸ் கிருஷ்ணன், டி.ஏ மதுரத்திடம் அந்தக்கால, இந்தக்காலப் பெண்களை ஒப்பிட்டு சொல்லிக்கொண்டிருப்பார்,                                                                                                                                                         ”அவ காட்டுக்குப் போவா, களையெடுப்பா,காரியம் பாப்பா, கஞ்சி குடிப்பா இவ கண்ணாடி பாப்பா, ஊரச்சுத்துவா,                          காருல போவா, காப்பி குடிப்பா                                                                 
          அது 1960 காலமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சப்தமில்லாச் சென்னை!!