வணக்கம் வாழவைக்கும் சென்னை - 1
” அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக்குடிசைகட்டி பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ” அ பார வளர்ச்சியில் மணிக்கொரு மாற்றங்களைச் சந்திக்கிறது சென்னை. உலகின் மிகச்சிறந்த உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் தந்து தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார்கள். அமெரிக்க கோழியிறைச்சிக்காக நீங்கள் மால்களில் கால்கடுக்க நிற்பதற்கு பழகிக்கொண்டாக வேண்டும். வீட்டிலிருந்தபடியே உண்ணவிரும்பினாலும் கவலையில்லை சுடச்சுட வீட்டிற்குவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். திரையரங்குகள் தங்கள் தோற்றத்தை நீங்கள் விரும்பும் புதிய வடிவத...