இடுகைகள்

ஒரு அப்பாவி வாக்காளனின் புலம்பல்கள்.

படம்
வணக்கம் . மீண்டுமொருமுறை நாம் வாக்குச்சாவடிகளுக்கு “வருகைபுரிய” இருக்கிறோம். காலச்சுழற்சியில் இந்தியாவின் – சுதந்திர இந்தியாவின் – 16வது தேர்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம். நம் கைகளில் ஐந்தாண்டுகளுக்குஒருமுறை மட்டுமே தரப்படுகிற அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாழ்க்கை அனுமதிச்சீட்டு. நாம் சில விஷயங்களை   நினைவுகொள்ளவேண்டிய தருணம் இது, ஆமாம் அது மிக அவசியமானதும்கூட. ஒரு நாட்டின் மிக அடிப்படைத்தேவைகளான கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றில் சுதந்திரத்திற்கு பின்பான இந்த 67 வருடங்களில் நமது நிலை என்ன? ஏற்றுமதியிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்? பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் நமது முன்னேற்றம் அல்லது பின்னடைவிற்கான உண்மையான காரணிகள் என்ன? நதிநீர் இணைப்பு இதுவரை சாத்தியமாகாததன் மர்மம் என்ன?       இதற்கெல்லாம் ஒரே பதில்தான். அது, நம்முடைய எதற்கும் அசராத   ” சகிப்புத்தன்மை”. நமது சகிப்புத்தன்மையின்மேல் கட்டமைக்கப்படுகிற அரசு, அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன் காரணமாகவே இந்தக் கேள்விகளுக்கு நம

சண்டே ஸ்நாக்ஸ் 3

படம்
பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளில் சில எல்லோரும் அதிகம் பயன்படுத்துபவையாக இருக்கும். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒருசில வார்த்தைகள் அதிகமாகப் புழங்கும். திருநெல்வேலியில் அண்ண ’ வும் மதுரையில் அண்ணே ’ வும் சென்னையில் அண்ணா ’ வும் போல ஒரே வார்த்தை வெவ்வேறு தொனி ’ களில் உச்சரிக்கப்படுவதுமுண்டு. ஆங்கிலவார்த்தைகள் அன்றாட வாழ்வின் பேச்சுபோக்கில் கலந்தபிறகு ஏரியாவேறுபாடின்றி ஒரே உச்சரிப்பில் எங்கும் புழங்கும் சமத்துவ வார்த்தைகளாக சிலவும் நிலவிவருகின்றன. அப்படி ஒரு வார்த்தை லூசு ’. நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ பிரயாணம் செய்யும்போது அல்லது காத்திருக்கும்போதோ இந்த வார்த்தையை யாராவது யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு தானிருப்பீர்கள். செல்ஃபோனில் பறிமாறப்படுகிற 25 வார்த்தைகளில் இது இரண்டுமுறை இடம்பெறும். பேசிக்கொள்பவர்கள் காதலர்களானால் இதன் எண்ணிக்கை 10ஐத்தாண்டும். லூசு என்பது தமிழ்வார்த்தையா என்று சொல்லுங்கண்ணே சொல்லுங்க ’ இமான் அண்ணாச்சியிடம் சொல்லி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சத்தியம் செய்வார்கள் தமிழ்தானென்று. என் மகள் அவள் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தாள், ” அப்பா, ஸ

ரிமோட் கண்ட்ரோல்

படம்
சேனல்சுப்ரமணி காலையில கடவுள்வணக்கம் ரொம்ப முக்கியம்டா சுப்ரமணிண்ணு நம்ம தெக்குத்தெரு திண்ணவீட்டு ஆச்சி சொல்லுவாக, அஞ்சறைக்கெல்லாம் ‘மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும்தாயே ’ ண்ணு ஆரம்பிச்சுருதான் விஜய் ’ யில, ஏழறவர பக்தித்திருவிழா, வீடுதேடிவருவான் விட்டலன், பாரதக்கதைகள்னு நல்ல ஆரம்பந்தான். கேக்கதுக்குச் சொகமாத்தான் இருக்கு, கதைக்குள்ள இத்தனகதயா?ண்ணு ஆச்சர்யப்பட்டான் சொக்கு. கேக்கதுக்கே நமக்கு இப்படியிருக்கே, அதெல்லாம் எழுதிவச்சுருக்காவளே, அவுகளுக்கு எப்படி இருந்திருக்கும் ’ ணேன் நான். என்னசொல்லுதிய, அட கண்ணன், ராமன்லாம் இருக்காவ அல்லது இல்ல, ஆனா அதெயெல்லாம் ஒரு கதையா யோசிச்சு நம்ம பயலுவளுக்கு படிக்கதுக்கு கொடுக்கணும்னு தோணுச்சுபாத்தியளா, அதச் சொல்லணும்.   இந்தவாரம் பேர்கிரில்ஸு ஒரு பூச்சிய திண்ணாரு, நல்ல பெரிய பூச்சி, ஏகப்பட்ட காலுவளும், கொடுக்குமா இருந்திச்சி. கொடுக்கக்கடிச்சு துப்பிட்டு முகத்தச் சுளிச்சுகிட்டே சாப்ட்டு முடிச்சாரு. ‘இது பயங்கரமா நாருது ’ ண்ணு சொல்லிக்கிட்டெ திண்ண அவரோட மனசு அப்போ என்ன நெனைச்சிருக்கும் ’ ணு யோசன பண்ணேன். காடுகரைகள்ல, மக்கமன