இடுகைகள்

மனிதனை நோக்கிய மனுஷ்ய’னின் கேள்வி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

படம்
      மனுஷ்யபுத்திரன், ஞானி மாதந்தோறும் நடத்திவருகிற கேணி இலக்கிய அமர்வில் வாசித்த “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ” என்கிற கவிதையை நண்பர்.பத்ரி சேஷாத்ரியின் பதிவில் (http://www.badriseshadri.in/2012/07/blog-post.html ) காணொளியாகக் காணநேர்ந்தபோது இனம்புரியாத ஒரு உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டேன். ஒரு நாளில் ஒரு மனிதனின் நித்தியப்படி கடமைகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை சம்பவங்களையுமே கேள்விகளாக்கி, ஏன் இப்படி என்று கேட்பதன்மூலம் நம்மை நோக்கிய ஒரு சுயவிமர்சனத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார்.        நாம் என்னவெல்லாம் செய்யக்கிடக்க, உண்மையிலேயே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அறியவரும்போது, ஒரு திடுக்கிடலைத் தவிர்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே கவிதையைக்கேட்டேன், அதன் கூடவே பயணித்தேன், அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றலாம்.        பயண அவசரத்தில் பாதையின் குறுக்கே வந்துவிட்ட நாய்க்குட்டியை வண்டியேற்றிக் கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி, அன்றைய நாளின் எல்லா வேலைகளையும் பாதித்து விடுகிறதுதானே. இங்கு நாய்க்கு

சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

படம்
          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.    செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை த