அண்ணாத்த ஆடுறார்…

திந்தாக்கு தகிட திந்தாக்கு தகிட என்று குதித்துக் கும்மாளம் போடுகிறார் அண்ணாத்த, நமக்கும் உள்ளே துள்ளுகிறது, அமைதியாய் அமர்ந்து பார்க்கிறோம். வயது ஒரு பொருட்டில்லை, சொல்லப்போனால் அது நமக்குக் கொஞ்சம் கவலையளிக்கிறது. உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா என்று அவர் தொடர்ந்து பாடி ஆடி நம்மை மகிழ்விக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது என்பதை அவர் அண்ணாத்த கடைசிநாள் படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கிறார். உடல்நலப் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால் அவரது கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இரண்டுமூன்றுபேர் இடம்பெறக்கூடும். எப்படி இது சாத்தியமாகிறது என்று கொஞ்சம் யோசித்தால், இது இன்று நேற்றல்ல 40 வருட உழைப்பினால் கிடைத்த அன்பு, அங்கீகாரம், காதல். இன்றைக்கு 70 வயதுடையவர்கள் ரசிக்கிறார்கள், அது சம வயது என்பதால் இருக்கலாம், குழந்தைகள் / இளம்பெண்கள் ரசிப்பதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிர். அவரோடு கதாநாயகியாக நடித்து தற்போது வில்லியாக நடித்திருக்கும் குஷ்பு’ தனது மகள் அவரின் தீவிர விசிறி என்று சொல்லியிருப்பது ஒரு உதாரணம். தாதாசாகிப் பால்கே’ அ...