இடுகைகள்

ரிமோட் கண்ட்ரோல்

படம்
சேனல்சுப்ரமணி காலையில கடவுள்வணக்கம் ரொம்ப முக்கியம்டா சுப்ரமணிண்ணு நம்ம தெக்குத்தெரு திண்ணவீட்டு ஆச்சி சொல்லுவாக, அஞ்சறைக்கெல்லாம் ‘மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும்தாயே ’ ண்ணு ஆரம்பிச்சுருதான் விஜய் ’ யில, ஏழறவர பக்தித்திருவிழா, வீடுதேடிவருவான் விட்டலன், பாரதக்கதைகள்னு நல்ல ஆரம்பந்தான். கேக்கதுக்குச் சொகமாத்தான் இருக்கு, கதைக்குள்ள இத்தனகதயா?ண்ணு ஆச்சர்யப்பட்டான் சொக்கு. கேக்கதுக்கே நமக்கு இப்படியிருக்கே, அதெல்லாம் எழுதிவச்சுருக்காவளே, அவுகளுக்கு எப்படி இருந்திருக்கும் ’ ணேன் நான். என்னசொல்லுதிய, அட கண்ணன், ராமன்லாம் இருக்காவ அல்லது இல்ல, ஆனா அதெயெல்லாம் ஒரு கதையா யோசிச்சு நம்ம பயலுவளுக்கு படிக்கதுக்கு கொடுக்கணும்னு தோணுச்சுபாத்தியளா, அதச் சொல்லணும்.   இந்தவாரம் பேர்கிரில்ஸு ஒரு பூச்சிய திண்ணாரு, நல்ல பெரிய பூச்சி, ஏகப்பட்ட காலுவளும், கொடுக்குமா இருந்திச்சி. கொடுக்கக்கடிச்சு துப்பிட்டு முகத்தச் சுளிச்சுகிட்டே சாப்ட்டு முடிச்சாரு. ‘இது பயங்கரமா நாருது ’ ண்ணு சொல்லிக்கிட்டெ திண்ண அவரோட மனசு அப்போ என்ன நெனைச்சிருக்கும் ’ ணு யோசன பண்ணேன். காடுகரைகள்ல, மக்கமன

சண்டே ஸ்நாக்ஸ் 2

படம்
·          ஐடியா மேக்ஸ் த மான் ’ என்பார்கள். மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் புதிய ஐடியாக்களை செயல்படுத்திப் பார்த்ததன் விளைவுதான். அப்படித்தான் அவன் ரூபாய்நோட்டுகளை எண்ணுவதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். வங்கிகளிலும் அதிகம் பணம்புழங்கும் அலுவலகங்களிலும் அதைப்பயன்படுத்தத் துவங்கினார்கள். என்றாலும் யாரும் அதை நம்புவதில்லை. எவ்வளவு கூட்டம் காத்திருந்தாலும் காசாளர்கள் ஒருமுறை கையால் எண்ணிவிட்டு பின்பு இயந்திரத்தில் போட்டு எண்ணி மீண்டும் ஒருமுறை கையால் எண்ணி அதன்பிறகே அந்தத்தொகை சரியாக இருக்கிறது என்று முடிவுக்கு வருவார்கள். சமீபத்தில் ஒருநாள் பணம் கட்டுவதற்காக் தொலைபேசி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு இதுபோன்ற ஒரு இயந்திரமிருந்தது. பணம் வசூலிக்கிற பெண்மணி சற்றே வயதானவராக இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைகளுமாக இருந்த அவற்றில் சில்லறை நோட்டுகளை தனியே வைத்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் இரண்டு முறை(??) எண்ணியபிறகு அந்த பணமெண்ணும் இயந்திரத்தில் போட்டார். அது 2 என்று ஒளிர்ந்தது.