இடுகைகள்

கொலுவோடு கொண்டாடு

படம்
      கொலு என்றால் சின்னவயதில் கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகளில் மட்டும் வைக்கப்பட்டிருக்கும் 9 படிகள்கொண்ட பிரம்மாண்டம்தான் ஞாபகம் வருகிறது. 9 நாட்களிலும் தவறாது நண்பர்கள் சகிதம் ஆஜராகிவிடுவேன். பெரியவர்கள் இரண்டு பக்திப்பாடலகளைப் பாடிமுடித்தபிறகு சிறுமியர்களின் நடனம் ஆரம்பமாகும். வெறுமே கைகொட்டியும் பின்பு கோலாட்டோடும் பாடப்படுகிற கதையோடு நகைச்சுவை கலந்த பாடல்கள் இப்போதும் ஊர்த்தெருக்களில் கற்றி அலையக்கூடும். இதில் பாடப்படுகிற பல பாடல்களை பள்ளிகளில் பாடி கேலி செய்து, சம்பத்தப்பட்ட சிறுமியிடம் திட்டு வாங்குவதும், பின்பு மாலையில் கொலுவைக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லப்பட்டு மிரட்டவும் படுவோம். ‘கிண்டல் பண்ணீங்கண்ணா இனிமே இங்க வரக்கூடாது’. இழக்கவே முடியாத கொலுவிற்காக, எல்லோர் முன்பும் கிண்டல் செய்துவிட்டு தனிமையில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட கதைகள் ஒரு தனி அத்தியாயம். அந்த 9 நாட்களிலும் அவர்கள்தான் ஹீரோக்கள், மாலை 5 மணிக்கே கொலுவைத்திருக்கிற வீட்டின் வாசலில்கூடிவிடுவோம். வீட்டுமுற்றத்தில் ஏதாவது விளையாடுவதும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுமாக இருப்போம், அது வீட்டிலுள்ளவர்கள

சுவரோடு ஒட்டிய சென்னை

படம்
சென்னையையும் சுவரொட்டியையும் நீங்கள் பிரித்துப்பார்க்க நினைத்தால் அது மிகச்சிரமமான காரியம்தான். சென்னைச் சுவர்களோடு பிரிக்கமுடியாத பந்தம் கொண்டிருப்பவை ஏசியன், நெரோலாக், பெர்ஜெர்களைவிடவும் இந்த சுவரொட்டிகள்தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக ஒரு சினிமா விளம்பரம் உங்களுக்கு 21 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்   என்று கேட்டுக் கடுப்படித்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி அப்புறம் சப் ’ பென்று முடிப்பது ஒரு விளம்பர உத்தி. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா, சண்டேண்ணா ரெண்டு என்று அவ்வப்போது பொதுப்பார்வையை தங்கள் பக்கம் திருப்பி பலனடைந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் தொலைகாட்சித் தொடர்களுக்கும் அதுமாதிரி ஒரு திடீர் திருப்ப ’ விளம்பரங்களை சுவரொட்டிகள் மூலம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியதில் சரவணன் மீனாட்சிக்கு பெரும் பங்கு உண்டு. என் நண்பனின் 8 வயது மகள் சரவணன்மீனாட்சி திருமணம் ஒளிபரப்பான அன்று 11 மணிவரை விழித்திருந்து பார்த்துவிட்டு அயர்ச்சியாய் சொன்ன வார்த்தை “ நல்லவேளைப்பா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது, இனிமே பிரச்சினை இல்ல ”   தமிழகத்தின் பெரும்பாலான மனிதர்கூடுமிடங்களிலெல்