இடுகைகள்

சுவரோடு ஒட்டிய சென்னை

படம்
சென்னையையும் சுவரொட்டியையும் நீங்கள் பிரித்துப்பார்க்க நினைத்தால் அது மிகச்சிரமமான காரியம்தான். சென்னைச் சுவர்களோடு பிரிக்கமுடியாத பந்தம் கொண்டிருப்பவை ஏசியன், நெரோலாக், பெர்ஜெர்களைவிடவும் இந்த சுவரொட்டிகள்தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக ஒரு சினிமா விளம்பரம் உங்களுக்கு 21 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்   என்று கேட்டுக் கடுப்படித்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி அப்புறம் சப் ’ பென்று முடிப்பது ஒரு விளம்பர உத்தி. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா, சண்டேண்ணா ரெண்டு என்று அவ்வப்போது பொதுப்பார்வையை தங்கள் பக்கம் திருப்பி பலனடைந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் தொலைகாட்சித் தொடர்களுக்கும் அதுமாதிரி ஒரு திடீர் திருப்ப ’ விளம்பரங்களை சுவரொட்டிகள் மூலம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியதில் சரவணன் மீனாட்சிக்கு பெரும் பங்கு உண்டு. என் நண்பனின் 8 வயது மகள் சரவணன்மீனாட்சி திருமணம் ஒளிபரப்பான அன்று 11 மணிவரை விழித்திருந்து பார்த்துவிட்டு அயர்ச்சியாய் சொன்ன வார்த்தை “ நல்லவேளைப்பா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது, இனிமே பிரச்சினை இல்ல ”   தமிழகத்தின் பெரும்பாலான மனிதர்கூடுமிடங்களிலெல்

கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!

படம்
 அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு       அவ்வளவாய்ப் பேசுவதில்லை இவர் என்னோடு,         இதுவரை விலகியே இருந்த மற்றொருவர் இப்போது            என் நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது               தெரிந்ததும், அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.                அவர் விலகியதை அறிந்து இவர் மீண்டும்                 பேசத்துவங்கினார். பிறிதொருவர் இப்போது அவருக்கு           நண்பரானார், இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்        துவங்கிய நாளிலிருந்து, நான் இருவரோடும்                   இப்பொது பேசுவதில்லை .