இடுகைகள்

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!

படம்
       ஊரெல்லாம் உங்க பேச்சாத்தாம்ணே கெடக்கு, பத்திரிகைக்காரவுங்கள போடா ’ ங்கறமாரி ஏதோ சொல்லிட்டீங்களாம். சொல்லத்தான் சொல்லுவீங்க, பின்னாடியே தொரத்திக்கிட்டே இருந்தா? ஒரு மனுஷனுக்கு தாங்கமுடியாத வேதனயான நேரத்துல, அடுத்து என்ன செய்யலாம்ணு முடிவெடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலயில என்னயக்கேட்டாலும் இப்படித்தேன் கோவம் வரும். இந்தப் பத்திரிகைக்காரவுங்களுக்கு செய்தி சூடா வேணும்ணே, அவ்வளவுதான். டயானாவ வெரட்டிவெரட்டியே கொன்னவங்கதானண்ணே இவிய்ங்க. ஆனா பாருங்க பொது வாழ்க்கயில இதல்லாம் சாதாரணம்ணே, ஒங்களுக்குத் தெரியாததா என்ன, நம்ம கோவத்தக் காட்டுற எடம் இதாண்ணே, எத்தன மாசம், எத்தன சந்துபொந்தெல்லாம் நுழைஞ்சு, எவ்வளவு மக்கள சந்திச்சு, எப்படிக் கஷ்டப்பட்டு வாங்குன வெற்றிண்ணே இது.              10 சதவீதம் ஓட்டுண்ணா சும்மாவாண்ணே, எத்தன எத்தன அப்ளிகேஷன அலசி ஆராஞ்சு, எப்படியெல்லாம் சோதன செஞ்சு வேட்பாளர்கள தேர்ந்தெடுத்து, அவங்கள ஜெயிக்கவைக்கிறதுக்கு தொண்டதண்ணி வத்தக் கத்தி, அப்படிக் கெடச்ச வெற்றிண்ணே இது. அது மட்டுமில்லாம யார்கூட சேந்தா சட்டசபைக்குள்ள மரியாதையா நுழையற அளவுக்கு சீட்டு கிடைக்கும்னு

சண்டே ஸ்நாக்ஸ்

படம்
               வழக்கமாய் நான் அலுவலகம் செல்லும் வழியில் (வேளச்சேரி-ஜிஎஸ்டி ரோடு) ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் தினமும் யாராவது ஒருவர் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் வண்டியைச் சாய்த்துப் படுக்கவைத்து பெட்ரோலைச் சேகரிக்க முயன்றுகொண்டிருப்பார். வாரத்தில் மூன்று நாட்களாவது காணக்கிடைக்கிற காட்சி இது. பெர்முடா முக்கோணத்தில் காணாமல்போகிற கப்பல்கள்மாதிரி இது என்னடா, இந்த இட்த்திற்கு ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்று என்னையே நான் வியந்து கேட்டுக்கொள்வதுண்டு. நேற்று காலை நான் அந்த இடத்தை நெருங்குவதற்கு சற்று முன் வண்டியிலிருந்து இஞ்சின் சப்தம் மெள்ளக் குறைய ஆரம்பித்தது. நான் பெட்ரோல் அளவு மீட்டரைப் பார்த்தேன் அதன் அளவுமுள் கொஞ்சமும் மேலெழும்பவில்லை. அப்போதுதான் ஞாபகம் வந்த்து நேற்று வண்டியை நிறுத்தும்போதே இன்று காலை எடுக்கும்போது பெட்ரோல் நிரப்பி எடுத்துவரவேண்டும் என்று முடிவு செய்திருந்தது. இதற்குள் வண்டி சரியாக அந்த திருப்பத்தில்போய் நின்றது. வேறு யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தேன், யாருமில்லை. இன்றைய கோட்டா நான்தான் என்று விதியைநொந்துகொண்டே வண்டியைத் தள்ளிக்கொண்டே பெட்ரோல்பல்க்கை அடைந்து பெ